Chakra Release Issue Cleared

விஷாலின் சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chakra Release Issue Cleared : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் சக்ரா திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை விஷால் பிலிம்ஸ் பேக்டரி நிறுவனம் தயாரிப்பிலும் இயக்குனர் ஆனந்தன் இயக்கத்திலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Trident arts நிறுவன தயாரிப்பாளர் ரவியிடம் நடிகர் விஷாலை வைத்து படம் எடுத்து தருவதாக இயக்குனர் ஆனந்தன் கூறியுள்ளார். இதனால் இந்த படத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் படத்தை ரிலீஸ் செய்ய இடைக்காலத் தடையும் விதித்தது. தற்போது உயர் நீதிமன்றம் சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கியுள்ளது.

மேலும் மார்ச் 5ஆம் தேதி வரையிலான தியேட்டர் வசூல் தொகை குறித்து மார்ச் 10ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தடை தளர்வு விஷால் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.