Chakra Movie Release Update
Chakra Movie Release Update

நடிகர் விஷாலின் சக்ரா திரைப்படம் OTT வழியாக ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Chakra Movie Release Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார்.

இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படங்களில் ஒன்று சக்ரா. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரெஜினா கஸன்ட்ரா மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ளனர்.

அஜித் எடுத்த முடிவால் வலிமை ரிலிஸில் நடந்த அதிரடி மாற்றம்

இந்த படத்தை எம்எஸ் ஆனந்தன் என்பவர் இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.

கொரானா பேரிடர் காலமென்பதால் திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக இந்த படத்தை நேரடியாக OTT வழியாக வெளியிட படக்குழு முடிவு செய்து உள்ளது.

படக்குழு ரூபாய் 40 கோடிக்கு இந்த படத்தை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அமேசான் ப்ரைம் நிறுவனம் ரூபாய் 33 கோடிக்கு இந்தப் படத்தை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.