Chakra Movie Release Date

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chakra Movie Release Date Announcement : தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்திறமைகளை கொண்டவர் விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக சக்ர என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

நடிகர் விஷால் தயாரித்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை எம்எஸ் ஆனந்தன் இயக்கியுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் பாலசுப்ரமணியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படம் உலகம் முழுவதும் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.