Central team visits Gaja cyclone damage
Central team visits Gaja cyclone damage

Central team visits Gaja cyclone damage – கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய, 7பேர் கொண்ட மத்திய அரசு குழு நேற்று சென்னை வந்தனர்.

இன்று முதல் 3நாட்களுக்கு பாதிக்கபட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதித்த இடங்களான நாகபட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், நாகை, கடலூர், திருச்சி, திண்டுக்கல், கரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயலால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கபட்ட இடங்களை ஆய்வு செய்ய சென்ற மத்திய, மாநில அமைச்சர்களை, விவசாயிகள் வழிமறித்து போராட்டம் நடத்தி வரும் இவ்வேலையில், இக்குழுவினர் தமிழகம் வந்திருப்பது அனைவரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வதற்கு முன்னர், ‘இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மத்திய குழுவினர் நேரில் சந்தித்து பேசுகின்றனர்.

பின்னர், விமானம் மூலம் சென்னையில் இருந்து புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல இருக்கின்றனர். மத்திய குழுவினர் 3நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து 27- ஆம் தேதி மீண்டும் சென்னை வந்து தலைமை அலுவலகத்தில் புயல் பாதித்த இடங்கள் மற்றும் நிவாரண உதவி குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்’.

மத்திய குழுவினரின் இவ்வருகை மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.