Central Government New Scheme on Tax Paying
Central Government New Scheme on Tax Paying

Central Government New Scheme on Tax Paying : நேர்மையாக வரி செலுத்துவோர் கௌரவிப்பதற்காக “வெளிப்படையான வரி விதிப்பு-நேர்மையாளரை கௌரவித்தல்” என்ற பெயரில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளிகாட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், பல்வேறு வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள், பட்டயக் கணக்காளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், வரி செலுத்திய பிரபலங்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளில் நேரடி வரி விதிப்பின் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CDID) கொண்டுவந்துள்ளது.

நல்ல நண்பனை இழந்து விட்டேன் – இயக்குனர் இமயம் பாரதிராஜா உருக்கம்

குறிப்பாக கடந்த ஆண்டு 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. புதிய தொழிற்சாலைகளுக்கான 15 சதவீதமாக குறைக்கப்பட்டது பகிர்ந்தளிக்கப்படும் ஈவுத்தொகை மீது வரி விதிப்பதும் ரத்து செய்யப்பட்டது.

இதேபோன்று வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வருமான வரி செலுத்தும் விண்ணப்பங்கள் எளிதாக வடிவமைக்கப்பட்டன. வரி செலுத்தும் முறையிலும் வெளிப்படைத் தன்மை கொண்டு வரப்பட்டது.

மேலும் கொரோனா தோற்று காலத்தில் வரி கணக்கு செலுத்துவதற்காக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலையில் கௌரி பதன் பொருள் இந்த புதிய திட்டம் மத்திய அரசு தொடங்கியுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.