Celebrities Comments on Kantha Sasti Kavasam Issue
Celebrities Comments on Kantha Sasti Kavasam Issue

கந்த சஷ்டி கவசம் இழிவு குறித்து தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலர் கொந்தளிப்புடன் கருத்து கூறி வருகின்றனர்.

Celebrities Comments on Kantha Sasti Kavasam Issue : தமிழ் கடவுளான முருகப்பெருமானின் புகழை பாடும் கந்த சஷ்டி கவசம் பாடல் இந்துக்கள் அனைவரும் மதிக்க கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் யூடியூப்பில் கருப்பர் கூட்டம் என்ற சேனலில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகவும் உயிராகவும் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

இதற்கு தற்போது பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. பலரும் இது குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் இது பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட தொடங்கியுள்ளனர்.

நடிகர் ராஜ்கிரண் இது உள் நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ள ஒன்றாகவே தெரிவதாக அவருடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி அவர்கள் எல்லையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்‌.

வைரல் வீடியோ எதிரொலி : பலரையும் நெகிழ வைத்த காளை மாட்டின் பாசம்.. அதிமுக முக்கிய உறுப்பினர்கள் செய்த அசத்தலான செயல் – குவியும் பாராட்டுக்கள் ‌

அதேபோல் லட்சுமி ராமகிருஷ்ணன் பல லட்சம் மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக இந்த வீடியோவை பதிவிட்டு சமூக சீரழிவை ஏற்படுத்தவும் மத கலவரத்தை ஏற்படுத்தவும் முயற்சி செய்கிறார்கள் என கண்டித்துள்ளார். மக்கள் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் எனவும் அவர் வீடியோ ஒன்றின் மூலமாக தெரிவித்துள்ளார்‌.

நடிகர் பிரசன்னா இதுகுறித்து போக்கிரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

நட்டி நட்ராஜ் அவர்களும் டிவிட்டர் பக்கத்தின் மூலமாக தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல பிரபலங்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பல போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் பதியப்பட்டு வருகின்றன.