Celebrities Comments About Shakeela

திடீரென ஷகிலாவை திரையுலக பிரபலங்கள் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

Celebrities Comments About Shakeela : தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து வந்தவர் ஷகிலா. மலையாள மொழியில் மிட்நைட் மசாலா படங்களில் நடித்து வந்த இவர் தற்போது அதுபோன்ற படங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து வருகிறார்.

மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஷகிலாவின் மற்றொரு முகத்தை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். போட்டியாளர்கள், நடுவர்கள் என அனைவரும் ஷகிலாவிற்கு நல்ல மரியாதையை கொடுத்து வருகின்றனர்.

ஷகிலாவை கவர்ச்சி நடிகையாக ஒதுக்கிய திரையுலகம் அவரை மதிக்க தொடங்கியுள்ளது. போட்டியாளர்கள் பலரும் அவரை மம்மி மம்மி என அழைப்பது அவர் மீதான கண்ணோட்டத்தை மாற்றுவதாக பல திரையுலக பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியை சேர்ந்த ஆதவனும் இது பற்றி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவும் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

https://m.facebook.com/story.php?story_fbid=3893036314091879&id=100001566462877