பெஸ்ட் கிளைமேக்ஸ் எது? பிகிலா? விஸ்வாசமா? என்ற ஓட்டெடுப்பு ஒன்றிற்கு விஜயகாந்த் ஓட்டளித்துள்ளார். இதன் ஸ்க்ரீன் ஷாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் இன்றைய சூப்பர் ஸ்டார்கள், வசூல் மன்னர்கள் என்றால் அது அஜித்தும் விஜயும் தான். இவர்கள் என்னவோ படம் நடிப்பதோடு தங்களின் போட்டிகள் முடிந்து விட்டன என்ற மனநிலையோடு தான் இருந்து வருகின்றனர்.

ஆனால் இவர்களின் ரசிகர்கள் அப்படி இருப்பதில்லை தினமும் சமூக வளையதளங்களில் இரு தரப்பினருக்கும் மத்தியில் வாய்க்கா தகராறு தான்.

இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் ஒருவர் பெஸ்ட் கிளைமேக்ஸ் எது? பிகில் என்றால் இந்த டீவீட்டை ரி-ட்வீட் செய்யுங்கள், விஸ்வாசம் என்றால் லைக் செய்யுங்கள் என கூறி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் .

இதனை விஜயகாந்த் லைக் செய்துள்ளார். இதனால் விஜயகாந்திற்கு பிடித்தது விஸ்வாசம் கிளைமேக்ஸ் தான் என கூறி ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Vijayakanth Tweet

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.