Calls Movie Release Date

VJ சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Calls Movie Release Date : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

தொகுப்பாளினியாக இருந்து படிப்படியாக உயர்ந்து சீரியலில் நடித்து பிரபலமானார்.

இப்படியான நிலையில் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது சித்ரா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர் கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜே சபரிஷ் என்ற இயக்குனரின் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த அறிவிப்பு சித்ரா ரசிகர்களிடையே ஒருபுறம் உற்சாகம் இருந்தாலும், மறுபுறம் இதனை பார்க்க சித்ரா இல்லையே என்ற கவலையும் நீடித்து வருகிறது.