Calls Movie Director About Chithra

சித்ரா தற்கொலை செய்து கொண்ட போது அணிந்திருந்த நைட்டி கால்ஸ் திரைப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டது என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Calls Movie Director About Chithra : தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகையாக வலம் வருபவர் சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது இறப்பிற்குப் பிறகு இவர் நாயகியாக நடித்துள்ள கால்ஸ் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.

மேலும் இந்த போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர் இதை பார்க்க சித்ரா நம்முடன் இல்லையே என மிகவும் வருத்தப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தற்கொலை செய்து கொண்டபோது சித்ரா அணிந்திருந்த நைட்டி கால்ஸ் திரைப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

அந்த நைட்டி தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறி சித்ரா அதனை தங்களிடம் இருந்து வாங்கிக் கொண்டார். ஆனால் தனக்கு பிடித்தமான நைட்டியை அணிந்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார், அவர் இப்படி செய்வார் என கொஞ்சம் நினைத்துப் பார்க்கவில்லை என இயக்குனர் தெரிவித்துள்ளார்.