Britto Helps on Daughter Marriage

மகளின் திருமணத்தை சிம்பிளாக நடத்தி விட்டு தளபதி 65 தயாரிப்பாளர் செய்த உதவிகள் பலரையும் பாராட்ட வைத்துள்ளது.

Britto Helps on Daughter Marriage : தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தொழிலதிபராக வலம் வருபவர் சேவியர் பிரிட்டோ. தளபதி விஜய்யின் நெருங்கிய உறவினரான இவர் தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

நேற்று இவரின் மகள் சினேகா பிரிட்டோவிற்கும் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளிக்கும் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

பிரிட்டோ மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தன்னுடைய மகளின் திருமணத்தை சிம்பிளாக நடத்தியுள்ளார்.

அடேங்கப்பா நடிகை ரோஜாவின் மகளா இது? என்ன ஒரு அழகு – ரசிகர்களை வியக்க வைத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!!

அதுமட்டுமல்லாமல் நான்காயிரம் ஆதரவற்றோர் ஏழை எளிய மக்களுக்கு மூன்று நாட்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கியுள்ளார். மேலும் 400 பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி அளித்துள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் தன்னுடைய மகளின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி இருந்தால் கூட இந்த அளவிற்கு திருப்தி ஏற்பட்டு இருக்காது. 4 ஆயிரம் பேருக்கு மூன்று நாட்களுக்கு மூன்று வேளையும் உணவு அளித்தது தனக்கு மிகப்பெரிய திருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய சூழ்நிலை காரணமாக திருமணத்திற்கு யாரையும் அழைக்க முடியவில்லை. இயல்புநிலை திரும்பிய பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அனைவரையும் அழைத்துச் கொண்டாட உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.