Box Office King

Box Office King : பாக்ஸ் ஆபீஸ் கிங் அஜித்தா? விஜயா? ரஜினியா? என நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் வெளியான தகவல் பலருக்கும் அதிர்ச்சியளித்து உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என்றால் முதலில் நினைவிற்கு வருபவர்கள் அஜித், விஜய், ரஜினி ஆகியோர்கள் தான்.

இவர்களின் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் திரையுலக ரசிகர்கள் அனைவர்க்கும் உண்டு.

இதனால் எங்களது இணையதளத்தின் ட்விட்டர் பக்கத்தில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. அந்த கருத்து கணிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காரணம் அஜித்திற்கு ரஜினிக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள் தான்.

மொத்தமாக 22, 681 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதில் 75% ஓட்டுகள் பெற்று தளபதி விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அதன் பிறகு அஜித் 20 % ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெறும் 5 % ஓட்டுகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

Box Office King of Tamil Cinema

அதே போல் யூ ட்யூபில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் இதுவரை 21,000 பேர் வாக்களித்துள்ளனர். இதிலும் தளபதி விஜய் 76 % ஓட்டுகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். அஜித் 18 % ஓட்டுகளும் ரஜினி 7 % ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

Box office

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.