Boney Kapoor About Valimai Update

வலிமை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

Boney Kapoor About Valimai Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

H வினோத் இயக்கத்திலும் போனி கபூர் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தொடங்கி ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் தற்போது வரை ஒரு அப்டேட்டை கூட படக்குழு வெளியிடவில்லை.

இதனால் இயக்குனர் வினோத் மீது ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் தமிழ் கடவுள் முருகன் வரை அப்டேட் கேட்டு வந்தனர் அஜித் ரசிகர்கள்.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் படம் ஒரு அளவிற்கு நிறைவு பெற்றதாகவும் பிப்ரவரி 15ஆம் தேதி முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஓரிரு சண்டைக் காட்சிகள் மட்டும் மீதம் உள்ளதாகவும் விரைவில் தயாரிப்பு வேலைகளை முடித்து ரிலீஸ் தேதியை வெளியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.