Valimai Update

வலிமை படம் இப்படித்தான் இருக்கும் என முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

Boney Kapoor About Valimai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

ஒருவழியாக ஒன்றரை வருடத்திற்கு பிறகு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தநலையில் போனிகபூர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் வலிமை படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார். இதுவரை ரசிகர்கள் அனைவரும் இப்படம் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இப்படம் சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்ததாகவும் இருக்கும் என போனி கபூர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் சென்டிமென்ட் கலந்த பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதனால் வலிமை திரைப்படம் விசுவாசம் படத்தை போல மீண்டும் ஒரு மரண மாஸ் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.