Bollywood Paper About Suriya

சூர்யாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் பத்திரிக்கை ஒன்று சூர்யா குறித்து பதிவிட்டுள்ளார்.

Bollywood Paper About Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் சூரரை போற்று.

சுதா கொங்கரா இயக்கியிருந்த இந்தப் படத்தை இதுவரை 100 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த படத்தையும் சூர்யாவின் நடிப்பையும் இந்தியத் திரையுலகம் தொடர்ந்து பாராட்டி வருகிறது.

ஆனால் சில பாலிவுட் பத்திரிகைகள் சூர்யாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் அவர் குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர்.

அதாவது பிரபல பத்திரிக்கை ஒன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூர்யா இதுவரை டோப்பா முடி வைத்து தான் நடித்து வந்ததாக கூறியுள்ளது. மேலும் மும்பையில் டாப் மருத்துவமனை ஒன்றையும் அவர் இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

இதனைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் கடுப்பாகி இந்த பத்திரிக்கையை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.