ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு செக் வைத்துள்ளது சென்சார் போர்டு.

Blue Sattai Maaran Movie Issue : தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாகும் படங்களை விமர்சனம் செய்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். இவர் அனைத்து படங்களையும் தரக்குறைவாக விமர்சனம் செய்து அஜித், விஜய், சூர்யா என அனைத்து தரப்பு ரசிகர்களிடம் எதிர்ப்புகளை பெற்றுள்ளார்.

மேலும் ரசிகர்கள் பலரும் எல்லா படத்தையும் மொக்கைனு விமர்சனம் பண்ணுறீங்களே நீங்கள் ஒரு படத்தை எடுங்க எனவும் கூறி வந்த நிலையில் தற்போது அவர் ஆன்ட்டி இந்தியன் என்ற பெயரில் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தினை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்தை சென்சார் சான்றிதழ்க்காக அனுப்பி வைக்க படத்தினை பார்த்த சென்சார் நிறுவனம் படத்திற்கு சென்சார் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது‌.

இதனையடுத்து ப்ளூ சட்டை மாறன் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.