blue satta

பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்டமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தமிழ் டாக்கிஸ் யுடியூப் விமர்சகர் புளூசட்டை மாறன். கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் தமிழ் திரைப்படங்களை கிண்டலடித்து வருபவர். இதனால் ரசிகர்களின் ஆதரவையும், தமிழ் திரையுலகின் எதிர்ப்பையும் பெற்றவர். பல எதிர்ப்புகளும், கண்டனமும் வந்த பின்பும் கூட அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. இவரின் விமர்சனத்தால் கோபமடைந்த பலரும், இவ்வளவு குறை கூறும் நீங்கள் ஒரு திரைப்படத்தை இயக்கி காட்டுங்கள் என சவால் விட்டு வருகின்றனர்.

blue satta2

இந்நிலையில், காமாட்சி சுரேஷ் தயாரிப்பில் அவர் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு கடந்த மாதம் துவங்கியது. தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் 2ம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இப்படத்தில் ராதாரவி, நரேன் மற்றும் பல புதுமுக நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.