viral video
விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடல் உடல் ஊன முற்றோர் ஒருவர் அருமையாக பாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் தந்தை-மகள் பாசத்தை விளக்கும் ‘கண்ணானே கண்ணே’ பாடல் பலரையும் கலங்க வைத்த பாடலாகும். இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.

மீண்டும் சாதனை படைத்த ராட்சசன் – இப்போ என்ன விஷயம் தெரியுமா .?

இந்நிலையில், இப்பாடலை கண்பார்வை இல்லாத ஒருவர் அழகான குரலில் சிறப்பாக பாடும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இதைக்கண்ட டி.இமான் அந்த நபரின் தொலைபேசி எண்களை கேட்டு டிவிட் செய்திருந்தார். அதன்பின் அந்த வீடியோ எடுத்தவரின் செல்போன் எண்கள் அவருக்கு கொடுக்கப்பட்டது. எனவே, அந்த பாடகருக்கு டி.இமான் வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.