BJP vs Watchman
BJP vs Watchman

BJP vs Watchman – நாயை வைத்து பா.ஜ.க-வை வம்பிழுத்துள்ளனர் ஜி.வி. பிரகாஷின் வாட்ச் மேன் படக்குழு. இதனால் ட்விட்டரில் ஒரு வித சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜ.க-வும் பா.ஜ.க உறுப்பினர்களும் நாங்கள் மக்கள் பாதுகாவலர்கள் என கூறி வருகின்றனர். இதற்கு இந்தியில் இணையான சொல் சவ்கிதார்.

பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க மந்திரிகள், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை ஆகியோர் ட்விட்டரில் தங்களது பெயர்களுக்கு முன்னாள் சவ்கிதார் என்ற வார்த்தையை சேர்த்து வருகின்றனர்.

இதனை வைத்து அவர்களை வம்பிழுத்து தங்களது படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் விதமாக ஜி.வி.பிரகாஷின் வாட்ச் மேன் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்டரில் நாயின் கழுத்தில் I Am Chowkidar Too என்ற வசனப் பலகை மாற்றப்பட்டுள்ளது. அதாவது அந்த நாய் நானும் பாதுகாவலர் தான் என கூறுவது போல் உள்ளது அந்த போஸ்டர்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த போஸ்டரை வைத்து ட்விட்டரில் சகட்டு மேனிக்கு பா.ஜ.க-வை கலாய்த்து வருகின்றனர்.