Bigil Vs Kaithi Profit
தீபாவளி ரேஸில் வெளியான பிகில், கைதி ஆகிய படங்களில் எது அதிக லாபம் பார்த்த படம் என்ற விவாதம் எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படமும் கார்த்தி நடிப்பில் உருவான கைதி திரைப்படமும் கடந்த வாரம் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகின்றன.

இதுவரை பிகில் திரைப்படம் ரூ 200 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதிலும் தமிழகத்தில் மட்டுமே ரூ 100 கோடி வசூல் செய்தது.

அதே போல் கைதி திரைப்படமும் இதுவரை மொத்தமாக ரூ 50 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இவைகளில் எந்த படம் லாபம் கொடுத்த படம் என்ற விவாதம் தான் சமூக வளையதளங்களில் ஓடி கொண்டிருக்கிறது.

உண்மையில் இரண்டு படங்களுமே தயாரிப்பாளருக்கு லாபம் தான். ஆனால் பிகில் திரைப்பம் பெரிய அளவிலான பொருட்செலவில் ரூ 180 கோடி பட்ஜெட்டில் 1 வருடத்திற்கு மேலாக படமாக்கப்பட்டு வெளியானது.

ரூ 180 கோடி பட்ஜெட் போக தற்போது படம் ரூ 20 கோடி முதல் ரூ 30 கோடி வரை லாபம் பார்த்துள்ளது.

அதே போல கைதி திரைப்படம் 6 மாத காலத்தில் வெறும் ரூ 30 கோடி பட்ஜெட்டில் படமாகியுள்ளது. இப்படம் இதுவரை ரூ 20 முதல் ரூ 25 கோடி வரை லாபம் பார்த்துள்ளது.

பிகில் படத்தின் பட்ஜெட் மட்டும் குறைவான பட்ஜெட்டாக இருந்திருந்தால் லாபம் பல மடங்காக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.