இரண்டாம் நாளில் பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பதை பார்க்கலாம் வாங்க.
இந்த வருட தீபாவளி விருந்தாக தளபதி விஜயின் பிகில் திரைப்படமும் கார்த்தியின் கைதி திரைப்படமும் வெளியாகி இருந்தது.
கைதியை விட பிகில் படத்திற்கு தியேட்டர்கள் அதிகம் என்பதால் முதல் நாள் வசூலும் பிகிலுக்கு அதிகமாகவே இருந்தது.
ஆம், பிகில் முதல் நாளில் தமிழகத்தில் ரூ 21 கோடி வசூல் செய்திருந்தகத்து. கைதி ரூ 3 கோடி வசூல் செய்திருந்தது.
இந்நிலையில் இரண்டாம் நாளில் கைதியின் வசூல் அதிகரித்துள்ளது, பிகிலின் வசூல் பின்னடைவை சந்தித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிகில் ரூ 16 கோடி வசூலை ஈட்டியுள்ளது. கைதி திரைப்படம் ரூ 3. 5 கோடி வசூல் செய்துள்ளது.