bigil
பிகில் பட டீசர் இணையத்தில் வெளியாகிவிட்டது என்கிற தகவல் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Bigil teaser video leaked in internet – அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் வீடியோ வருகிற 2ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராகவும், மீனவராகவும் இரண்டு வேடங்களில் விஜய் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளர்.

ஆனால், அதற்குள் பிகில் பட டீசர் வீடியோ இணையத்தில் லீக் ஆகி விட்டதாகவும், அதை பார்த்துவிட்டதாகவும் விஜய் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அதோடு, டிரெய்லர் நன்றாக இருக்கிறது எனக்கூறி சிலர் டீசர் பற்றிய தகவலையும் பகிர்ந்துள்ளனர்.

பிகில் திரைப்படத்தின் டீசர் வீடியோ அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ லீக் ஆகிவிட்டதாக செய்தி வெளியாகி வருவது விஜய் ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.