பிகில் பட ரிலீஸுக்கு பக்கா பிளானுடன் படக்குழு களமிறங்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Bigil Movie Release Plan : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது, ஆனால் எப்போது வெளியாகும் என்ற தேதி அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.
ஆனாலும் படத்தின் வியாபாரம் பரபரப்பாக சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து ஒரு சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையில் தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்? – வெளியேறிய மதுமிதா அதிர்ச்சி பேட்டி
விநியோகிஸ்தர் இப்படத்தை கிட்டத்தட்ட 90% தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே போல தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த தனுஷின் பட்டாசு மற்றும் விஜய் சேதுபதியின் சங்க தமிழன் ஆகிய திரைப்படங்கள் தள்ளி போக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பிகில் படத்தின் வசூல் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.