bigil record in 3 days
பிகில் திரைப்படம் வெறும் மூன்றே நாளில் வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அட்லீ இயக்கியுள்ள இந்த படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே ரூ 21 கோடி வசூல் செய்திருந்தது. இதனை தொடர்ந்து மூன்று நாளில் ரூ 60 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ரூ 30 கோடி வரை வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளில் வசூல் கிட்டத்தட்ட ரூ 40 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் கேரளாவில் பிகில் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் அங்கும் படத்தின் வசூல் நன்றாகவே வந்து கொண்டிருக்கிறது.

இதனால் மூலம் பிகில் திரைப்படம் மூன்றே நாளில் ரூ 100 கோடியை தாண்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.