Top 10 Movies 2019 in Vetri Theater
பிரபல தியேட்டரில் பிகில் டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்து டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பிகில். தீபாவளி சரவெடியாக வெளியாகி இருந்த திரைப்படம் வசூலில் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றான வெற்றி தியேட்டர் உரிமையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 4 நாளில் வேகமாக 20,000 டிக்கெட் விற்று வெற்றி தியேட்டரின் டாப் 10 பட்டியலில் பிகில் இடம் பிடித்திருப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும் டாப் 10 லிஸ்டில் விசுவாசம், பேட்ட, சூப்பர் டீலக்ஸ், காஞ்சனா 3, அவென்ஜர்ஸ் எண்டு கேம், தி லைன் கிங், நேர்கொண்ட பார்வை, கோமாளி, நம்ம வீட்டு பிள்ளை, அசுரன், பிகில் ஆகிய திரைப்படங்கள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.