பிகில் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே வசூலில் வரலாற்று சாதனை படைக்க உள்ளது. இது குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவின் இன்றைய மெகா ஸ்டார் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் பிகில்.
AGS எண்டெர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், ஆனந்த் ராஜ், விவேக் என ஏகப்பட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் பிகில் வியாபாரம் குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளன.
அவைகளை இப்பொது பார்க்கலாம் வாங்க.
தமிழ்நாடு ரைட்ஸ் – ரூ 75 கோடி ( ஸ்கிரீன் ஸீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது )
ஸ்டேடிலைட் ரைட்ஸ் – ரூ 27 கோடி ( சன் டிவி )
ஆன்லைன் பார்ட்னர் ரைட்ஸ் – ரூ 20 கோடி
ஓவர்சீஸ் ரைட்ஸ் – ரூ 30 கோடி
கேரளா, கர்நாடகா ரைட்ஸ் – ரூ 10 கோடி
தெலுங்கு ரைட்ஸ் – ரூ 10 கோடி ( வியாபாரம் பேசப்பட்டு வருகிறது )
North India Rights – ரூ 30 கோடி ( வியாபாரம் பேசப்பட்டு வருகிறது )
இதன் மூலமாக பிகில் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ 205 கோடியை வசூல் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு எவ்வளவு வசூல் செய்தாலும் படத்திற்கு லாபம் தான் என்பதால் பிகில் தீபாவளிக்கு சரவெடியாக வெடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.