Bigg Boss4 Voting Status

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss4 Voting Status : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் ஆரி, அனிதா, ரியோ, சிவானி, சோம், ஆஜித் மற்றும் அர்ச்சனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் அர்ச்சனா மிக மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு அடுத்ததாக ஆஜித் குறைந்த ஓட்டுக்களை பெற்று உள்ளார். இவர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.