Bigg Boss4 Trio Gang Birthday Secrets

பிக் பாஸ் 4 பிரபலங்கள் மூவர் ஒரே தேதியில் பிறந்து இருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Bigg Boss4 Trio Gang Birthday Secrets : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல் அவர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த சீசனில் டைட்டில் வின்னராக ஆரி தேர்வானார். மேலும் சமீபத்தில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நடைபெற்று முடிந்தது.

இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 4-ல் பங்கேற்ற ஆரி, சனம் ஷெட்டி மற்றும் அனிதா ஆகிய மூவரும் ஒரே தேதியில் பிறந்ததை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளன.

நண்பர்களாக இருந்த இந்த மூவரும் வெவ்வேறு மாதங்களில் பிறந்திருந்தாலும் ஒரே தேதியில் பிறந்துள்ளனர்.

ஆரி பிப்ரவரி 12ஆம் தேதி பிறந்துள்ளார். சனம் ஷெட்டி நவம்பர் 12ஆம் தேதி பிறந்துள்ளார். அதேபோல் அனிதா ஜூன் 12ஆம் தேதி பிறந்துள்ளார்.

இவர்கள் மூவருக்குள்ளும் இப்படி ஒரு ஒற்றுமையா என ரசிகர்கள் வியப்புடன் இந்த தகவலை ஷேர் செய்து வருகின்றனர்