Bigg Boss4 Shooting Cancelled

பிக் பாஸ் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததால் போட்டியாளர்கள் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Bigg Boss4 Shooting Cancelled : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுவரை 52 நாட்கள் எபிசோட் ஒளிபரப்பாகி உள்ள நிலையில் இன்று 53வது நாள் ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாகவும் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் பிக்பாஸ் செட் அமைக்கப்பட்டு உள்ள ஈவிபி சிட்டிக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் மழை நீர் புகுந்ததால் போட்டியாளர்கள் நேற்று மாலையே எங்களுக்கு ஷோ கூட வேணாம் வெளிய விட்டுடுங்க என கூறியுள்ளனர்.

இதனை அடுத்து விஜய் டிவி போட்டியாளர்களை 4 வாகனங்களில் பத்திரமாக பூந்தமல்லியில் உள்ள பைவ் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தங்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இன்றைய நிகழ்ச்சியில் இதுவரை நடந்து ஒளிபரப்பு செய்யப்படாத பழைய காட்சிகளை ஒன்று சேர்த்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் வீட்டில் இருந்து நீரை வெளியேற்றி பழைய நிலைமைக்கு கொண்டு வரும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

அந்த வேலைகள் முடிந்தவுடன் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகவே இதுவரை வெளியாகியுள்ள மூன்று ப்ரோமோ வீடியோக்களிலும் ரியோ மட்டுமே இடம் பெற்று இருந்தார் எனவும் கூறப்படுகிறது.