Bigg Boss 4 New Wild Card Entry

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஒரு நடிகை என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss4 New Wildcard Entry : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக நான்காவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இறுதியாக அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்து இருந்தார்.

அர்ச்சனாவை தொடர்ந்து அடுத்ததாக பதினெட்டாவது போட்டியாளராக மேலும் ஒரு பிரபலம் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த பிரபலம் வேறு யாருமில்லை சுசிலீக்ஸ் சர்ச்சையில் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு அதிர்வலையை ஏற்படுத்திய பாடகி சுசித்ரா தான் என கூறப்படுகிறது.

இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால் நிச்சயம் பல கலவரங்கள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கசிந்த தகவல்படி உண்மையில் சுசித்ரா பிக் பாஸ் வீட்டில் நுழைந்தால் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.