Bigg Boss4 10th Eviction Analysis

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Bigg Boss4 10th Eviction Analysis : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் தற்போது இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, நிஷா, ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து அடுத்ததாக இந்த வாரம் வெளியேற்றத்திற்காக ஆரி, கேப்ரெல்லா, ஷிவானி, ஆஜித், அனிதா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஐவரில் அனிதா தான் மிக மிக குறைந்த ஓட்டுக்களை பெற்று உள்ளார். நடிகர் ஆரி வழக்கம் போல அதிகமான வாக்குகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

இதனால் இந்த வாரம் வெளியேறப் போவது அனிதா தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறியது யார் என்பது நாளை 100% உறுதியாக தெரிந்து விடும்.