பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் ஜூன் மாதமே தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss Tamil5 Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் சின்னத்திரையில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களையும் இவர் தொகுத்து வழங்கி இருந்தார். கொரானா காரணமாக 4வது சீசன் தாமதமாக தொடங்கிய நிலையில் 5வது சீசன் ஜூன் மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கான வேலைகளில் நிகழ்ச்சி குழு இறங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்குவாரா என்பதை தேர்தல் முடியும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.