பிக் பாஸ் சீசன் 5-ஐ தொகுத்து வழங்கப் போவது கமல் இல்லை எனவும் வேறு யார் தொகுத்து வழங்குவார்கள் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Bigg Boss Tamil5 Anchor Update : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடங்கிய இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி பேசப்பட்ட ஒன்றாக மாறியது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ளன. விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உளளதாக கூறப்படுகிறது.

இதற்கான வேலைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமான எண்டோமால் நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும் தற்போது கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதால் அவர் சீசன் 5-ஐ தொகுத்து வழங்க மாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் எனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் சிம்பு பிக்பாஸ் லோகோ உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.