Bigg Boss Som Controversy

பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகர் சோம் செல்போன் பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Som Controversy : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் நேரடியாக உரையாடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த வார எவிக்ஷனில் அனிதா வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது சோம் தனது பக்கவாட்டில் செல்போனை வைத்து பயன்படுத்தியது போல வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் எல்லாமே பித்தலாட்டமா என விஜய் டிவியை கமல்ஹாசனையும் விளாகி வருகின்றனர்.

ஒரு சிலர் சோம் மொபைல் போனை பயன்படுத்தவில்லை வேட்டியில் உள்ள கரையை தேய்த்து உள்ளார் என கூறி வருகின்றனர்.

எது உண்மை என்பது சரியான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு விஜய்டிவி விளக்கம் அளித்தால் தான் தெரியும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.