Bigg Boss Samyukta in Vijay Sethupathi Movie

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு விஜய் சேதுபதி படத்தில் கமிட்டாகி தன்னுடைய காட்சிகளை நடித்துக் கொடுத்து முடித்துள்ளார் சம்யுக்தா.

Bigg Boss Samyukta in Vijay Sethupathi Movie : மாடலிங் மற்றும் பிட்னஸ் துறையைச் சார்ந்தவர் சம்யுக்தா. இவர் மலையாள படம் ஒன்றின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இந்தப் படம் வெளியான அதே ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி சீரியல் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.

அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் பங்கேற்று கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஆரம்பத்தில் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் மத்தியில் குட் புக்கில் இடம் பெற்ற சம்யுக்தா அதன் பின்னர் பாலாஜிக்கு பேவராக செயல்படுவதாக மக்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளானார்.

தொடர்ந்து இவர் ஆரியுடன் மோதலில் ஈடுபட்டு வந்தார். ஹரி தன் தாய்மையை தவறாக பேசியதாக கதறினார். ஒருநாள் கமல்ஹாசன் ஆறு எப்படி எதையும் பேசவில்லை என குறும்படம் போட்டு விலகினார். இருந்தும் சம்யுக்தா அதனை ஏற்றதாக தெரியவில்லை.

வெளியேறிய பிறகும் ஆரிக்கு எதிராகவே பேசி வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வேகத்திலேயே விஜய் சேதுபதி நடிக்கும் தர்பார் படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

இவருடைய காட்சிகள் கூட படமாக்கப்பட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் சம்யுதா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.