Bigg Boss Samyukta Controversy Photo

கையில் மது பாட்டிலுடன் சம்யுக்தா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிக்பாஸ் வீட்டில நீங்க வளர்ப்பு பற்றி பேசலாமா என நெட்டிசன்கள் விளாசி எடுத்து வருகின்றனர்.

Bigg Boss Samyukta Controversy Photo : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் சம்யுக்தா நடிகர் ஆரி உள்ளிட்ட சிலருக்கு நான் தலைவரானது பிடிக்கவில்லை. எல்லாம் வளர்ப்பு அப்படி என பேசினார்.

இதனால் என்னுடைய வளர்ப்பைப் பற்றி நீங்க எப்படி பேசலாம் என ஆரிக்கும் சம்யுக்தாவுக்கும் இடையே மோதல் உருவானது.

இப்படியான நிலையில் நெட்டிசன்கள் சம்யுக்தா கையில் மது பாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு நீங்க பிக்பாஸ் வீட்ல வளர்ப்பு பற்றி பேசலாமா அதுக்கு உங்களுக்கு தகுதியே இல்லை என திட்டி தீர்த்து வருகின்றனர்.