riythvika

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனின் வெற்றியாளரான ரித்விகாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கிடைத்த வாய்ப்பில் இதை கவனித்தீர்களா? ஆம் ரித்விகாவுக்கு கிடைத்த வாய்ப்பிற்கும் ஓவியாவுக்கு கிடைத்த முதல் வாய்ப்பிற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு புகழின் உச்சிக்கு சென்ற ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் முதலில் சரவணா ஸ்டோர் கடையின் விளம்பர படத்தில் தான் நடித்திருந்தார்.

தற்போது ரித்விகாவுக்கும் பிக் பாஸிற்கு பிறகு முதல் வாய்ப்பாக சரவணா ஸ்டோர் கடை விளம்பரத்தில் நடிக்க தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரித்விகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தான் நடித்திருந்த விளம்பர வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

Riythvika and Oviya

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.