RioRaj Wife
பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ரியோவால் அவரது மனைவிக்கு ஏற்பட்ட விபரீதம் குறித்து ரியோ நண்பர் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.

Bigg Boss Rio Wife : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் 18 போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் ரியோ ராஜ் கலந்து கொண்டுள்ளார். விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.

ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். சில சமயங்களில் ரியோ செயல்பாடுகளை பலரும் கண்டித்து வருகின்றனர்.

இதுகுறித்து ரியாவின் மனைவி ஸ்ருதியும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நான் உன்னை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி இருக்க கூடாது என வருத்தத்தோடு பதிவிட்டிருந்தார்.

அதற்கு காரணம் என்ன என்பதை ரியோவின் நண்பர் ஒருவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது ரியோவிற்கு வேண்டாதவர்கள் சிலர் ஸ்ருதிக்கு தவறான மெசேஜ் அனுப்பியும் அவரை கண்டபடி திட்டியும் வருகின்றனர்.

இதனால் அவர் கடும் மன உளைச்சலில் உள்ளார். அவரை அதிலிருந்து வெளியே கொண்டுவர நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.