NSK Ramya
பிக் பாஸில் தர்ஷன் செய்ததெல்லாம் TRP-காக தான் என பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரம்யா.

பிக் பாஸ் தர்ஷனுக்கும் அவரது காதலி சனம் ஷெட்டிக்கும் இடையே தற்போது பிரச்சனை உச்சத்தை தொட்டுள்ளது. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் கூறி கொள்கின்றனர். இந்நிலையில் தற்போது தர்ஷனின் தோழியும் பிக் பாஸ் போட்டியாளருமான ரம்யா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் தர்ஷன் பிக் பாஸில் செய்ததெல்லாம் TRP-காக தான். ஆனால் சனம் ஷெட்டி அதையெல்லாம் தவறாக புரிந்து கொண்டார். அவன் பிக் பாஸ் செல்வதற்கு முன்பே இவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை வரும். நாங்கள் தான் சமரசம் செய்து வைப்போம்.

ஒரு முறை சனம் ஷெட்டி தர்ஷனின் மொபைல் போனை சுக்கு நூறாக உடைத்து கூட இருக்கிறார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.