Bigg Boss Meera Mitun Tweets About Death?

தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மீராமிதுன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Meera Mitun Tweets About Death?: தமிழ் சினிமாவில் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கிய தானாசேர்ந்தகூட்டம் படத்தில் நண்பனின் மனைவியாக மீரா மிதுன் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர்

தற்போது மீரா மிதுன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “சமூக வலைத்தளங்களில் வரும் பதிவுகள் மன அழுத்தம் கொடுப்பதாகவும், தனக்கென்று நல்ல வேலை, குடும்பம், மற்றும் நண்பர்கள் இருப்பதாகவும், இருப்பினும் இதுபோன்ற பதிவு என்னை ரொம்ப கஷ்டப் படுத்துவதாகவும், அதனால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகும்” நான் இறந்துவிட்டால் அதற்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும், என்று மோடிக்கு டேக் செய்து டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலர் கலாய்த்து உள்ளனர்.

https://twitter.com/meera_mitun/status/1360467185492131843?s=19
https://twitter.com/meera_mitun/status/1360462446406733827?s=1002