பிக் பாஸ் கவனின் அம்மாவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது திருச்சி நீதி மன்றம்.
Bigg Boss Kavin Mother : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருபவர் கவின்.
ஏற்கனவே ஒரு காதலி, பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றது சாக்ஷியுடன் காதல், தற்போது லாஸ்லியாவுடன் காதல் என தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் இவரின் தாயார் சீட்டு கம்பெனி நடத்துவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவே கவினின் தாயார் உட்பட 2 பெண்களுக்கு திருச்சி நீதி மன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இதனால் கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விடுவாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.