Bigg Boss Kavin Marriage

பிக் பாஸ் கவினுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் மணப்பெண் யார் என்பது குறித்தும் தெரிய வந்துள்ளது.

Bigg Boss Kavin Marriage : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கவின்.

மேலும் இவர் வெள்ளித்திரையில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இலங்கைச் சேர்ந்த ஈழத்து பெண்ணான லாஸ்லியாவை காதலித்தார். அவருக்காக நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் தொடர்ந்து லாஸ்லியாவை காதலித்து கரம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் படங்களில் பிசியாக நடிக்க தொடங்கினார்.

இப்படியான நிலையில் தற்போது கவின் ஸ்டைலிஸ்ட் ஒருவரை காதலிப்பதாகவும் இவர்களின் காதலுக்கு இரு வீட்டார் ஓகே சொன்ன உடன் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் லாஸ்லியா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.