Bigg Boss Kavin Latest Photos

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Bigg Boss Kavin Latest Photos : தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகராக வலம் வருபவர் கவின். விஜய் டிவியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கிய இவர் அடுத்ததாக சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கவினுக்கு ரசிகர்கள் பலம் பல மடங்கு கூடியது.

வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு தற்போது லிஃபட் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கவினுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்துள்ளார்.

தற்போது கவின் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக ஸ்மார்ட்டாக மாறியுள்ளார். இந்த புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட கவினா இது என ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

இதோ நீங்களே பாருங்க