Bigg Boss Julie Latest Photos
Bigg Boss Julie Latest Photos

பிக்பாஸ் ஜூலியின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.

Bigg Boss Julie Latest Photos : தமிழகத்தில் மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் ஜூலி.

அதன்பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளே சென்று ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளானார்.

இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெகு விரைவில் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸுக்கு பிறகு சமூக வலைதளப் பக்கங்களில் எதை பதிவு செய்தாலும் ஜூலியை விமர்சிப்பதையே நெட்டிசன்கள் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

ஆனால் தற்போது தான் அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இந்த நிலையில் ஜூலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தலயா? தளபதியா? நீங்க யார் ஃபேன்?? பிக்பாஸ் 4 கலந்து கொள்கிறீர்களா? – ரசிகரின் கேள்விக்கு பளிச்சென பதிலளித்த ரம்யா பாண்டியன்!

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பிக்பாஸ் ஜூலியா இது? இவ்வளவு அழகாகி விட்டாரா என ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.

அதேபோல் வெள்ளித்திரையில் மன்னர்வகையறா என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்த ஜூலி உத்தமி, அம்மன் தாயீ, அனிதா எம்பிபிஎஸ், பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அந்த திரைப்படங்கள் ஜூலியை திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஜூலியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களின் கமெண்ட்ஸ்