BB Tamil

பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸாக விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

Bigg Boss Jodi Program : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது.

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது. பிக்பாஸ் ரசிகர்கள் எப்போது அடுத்த சீசன் தொடங்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடி என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, கேப்ரில்லா, ஜூலி, பாலா, சம்யுக்தா, சோம் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.