பிக்பாஸ் நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலே எப்போது நடைபெற உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுளளது.
Bigg Boss Grand Finale Update : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை முடிந்து நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
மக்களின் ஓட்டுக்களின் படி நடிகர் ஆரி தான் டைட்டில் வின்னர் ஆக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. பாலாஜி முருகதாஸ் டைட்டிலை வெல்லவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
இப்படியான நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் கிராண்ட் பினாலே ஒளிபரப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.