Bigg Boss Day96 Promo1

இதெல்லாம் உங்ககிட்ட இருக்கிற குறை என ரம்யா பாண்டியன் மூக்கை உடைத்துள்ளார் ஆரி.

Bigg Boss Day96 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்நிகழ்ச்சி முழுமையாக முடிவுக்கு வர உள்ளது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு ஒருவரைப் பற்றி குறை கூற வேண்டும் என்பதுபோல டாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய எபிசோடில் அனைவரும் ஆரியை குற்றம் கூறி இருந்தனர்.

இப்படியான நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோ வீடியோவில் ஆரி ரம்யா பாண்டியன் குறித்து பேசுகிறார்.

ரம்யா தன்னை சேப் கேம் விளையாடுவதாக கூறியதாக ஆரி பேச நான் ஒன் சைடா விளையாடுறீங்க என்றுதான் கூறினேன் என்று ரம்யா கூறுகிறார்.

அதற்கு ஆரி நான் பேசி முடித்து விடுகிறேன். ஒருவர் பேசும் போது யாரும் குறுக்கே பேசக்கூடாது அதுதான் ரூல்ஸ். இதுதான் உங்க கிட்ட இருக்குற குறை. குறை ஏதாச்சும் சொன்னா அதை கேட்கிற பக்குவம் இல்லை என விளாசியுள்ளார்.