Bigg Boss Day92 Promo3

நேரடியாக பைனலுக்கு செல்லும் டிக்கெட் பினாலே டாஸ்க் இன்று நடைபெறவுள்ளது.

Bigg Boss Day92 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில் 92வது நாளான இன்று நேரடியாக பைனலுக்கு செல்வதற்கான டிக்கெட் பினாலே டாஸ்க் நடைபெற உள்ளது.

இதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. மிகவும் கடுமையான டாஸ்க்கில் அனைவரும் தோல்வியைத் தழுவ இறுதி வரை ரியோ மற்றும் பாலாஜி மட்டுமே தாக்குப் பிடித்துள்ளனர்.

இவர்களில் யார் ஜெயிக்க போகிறார்கள் யார் நேரடியாக பைனலுக்கு செல்ல போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தங்கள் சேனலில் செல்லப்பிள்ளையான ரியோவை ஜெயிக்க வைத்து நேரடியாக பைனலுக்கு அனுப்பி வைக்கவும் வாய்ப்புள்ளது என கூறி வருகின்றனர்.

அதேபோல் டிஆர்பி எகிற முக்கிய காரணமாக இருந்து வரும் பாலாஜியையும் இறுதி வரை கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.