Bigg Boss Day86 Promo2

ஷிவானியின் அம்மா கேட்ட கேள்வியால் கண் கலங்கிவிட்டார் பாலாஜி முருகதாஸ்.

Bigg Boss Day86 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஷிவானியின் அம்மா எதுவும் பண்ணாம இருக்க எதுக்கு இங்க வந்த என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீ எதுக்கு வந்த என்ன பண்ணிட்டு இருக்க என திட்டியதை வைத்து பாலாஜி முருகதாஸ் கண்கலங்கி உள்ளார். எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என அழுதுள்ளார்.

கிட்டத்தட்ட இந்த காட்சிகள் அப்படியே கடந்த சீசனில் லாஸ்லியா மற்றும் கவின் இடையே நடந்தது போலவே இருக்கிறது.

லாஸ்லியாவின் தந்தை நீ எதுக்கு உள்ள வந்த என்ன பண்ணிட்டு இருக்க என திட்டியதால் கவின் மனமுடைந்து கண்கலங்கினார்.

அதே பாணியில் தற்போது ஷிவானியின் அம்மா திட்ட அதனால் மனமுடைந்து பாலாஜி கண் கலங்குகிறார்.

இதோ அந்த வீடியோ