Bigg Boss Day85 Promo2

ஆரி ஒரு செல்பிஸ் என சிவானி மற்றும் ரம்யா பாண்டியன் கூட்டம் கூடி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day85 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் ப்ரோமோ வீடியோவில் நாமினேஷன் நடைபெற்றது. இதனை அடுத்து இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் சிவானி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் ஆரியை குறைகூறி பேசுகின்றனர். ஆரி சொல்ற பாயிண்ட் எல்லாம் சில சரியாத்தான் இருக்கு. ஆனால் தனக்கென்று வரும்போது அவர் செல்ஃபிஸ்ஸாக நடந்து கொள்கிறார் என சிவானி கூறுகிறார்.

அதேபோல் ரம்யா பாண்டியன் ஆரி செய்வது எல்லாம் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. ஆனா அதையெல்லாம் ரசிப்பது போல எனக்கு கொஞ்சம் கூட தோன்றவில்லை என பேசுகிறார்.

ஆரியை பகைத்துக் கொண்டவர்கள் ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நிலையில் அடுத்த பலியாடு உங்க ரெண்டு பேரில் ஒருவர் தான் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.